.

தங்கப்பனுக்கு அவன் தந்தை இறந்த பிறகுதான் பொறுப்பு என்பது என்ன என்று `அறிய முடிந்தது. இளம் வயதில் தாயை இழந்த அவனை அவனது தந்தை அவன் போன போக்கில் விட்டார். அத னால் அவன் எதுவும் படிக்காமல் உதவாக்கரையாக ஆனான். எந்த வேலையையும் செய்ய அவன் உடம்பு வளையவில்லை. 

தங்கப்பன் தன் தகப்பன் விட்டுப்போன சொத்தின் பேரில் கடனை வாங்கி அவற்றை எல்லாம் இழந்துவிட்டான். அந்த நிலையில் வயிற்றுப் பாட்டிற்கு ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவனை அந்த ஊரார் நன்கு அறிவார்களாதலால் அவனுக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. 

முடிவில் வேறு ஊருக்குப் போய் வேலை தேடுவது  என்ற முடிவோடு ஒருநாள் மாலை அவன் தன் ஊரைவிட்டுக் கிளம்பினான். இருட்டும் போது அவன் ஒரு அடர்ந்த காட்டை அடைந்தான். அப்போது திடீரென பலத்த காற்று அடித்து பெருத்த மழையும் பெய்தது. எங்காவது தங்கலாம் என நினைத்து அவன் சுற்றிலும் பார்த்த போது சற்று தூரத்தில் மங்கிய விளக்கொளி தெரிந்தது. 

அவன் அதனை நோக்கிச் சென்றபோது ஒரு பாழடைந்த அம்மன் கோவிலை அடைந்தான். அங்கு விளக்கொளியில் ஒரு வாலிபன் அக் கோவிலை ஒரு ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டான். 

அந்த வாலிபனும் தங்கப்பனைக் கண்டு “ஓ! மழையில் நன்றாக நனைந்து விட்டாயே. இந்தா! இந்தத் துண்டைக் கொண்டு தலையைத் துடைத்துக் கொள் பிறகு வேஷ்டி சட்டையைப் பிழிந்து அணிந்து கொள்” என்று கூறி ஒரு துண்டைக் கொடுத்தான். தங்கப்பனும் அவன் கூறியபடியே செய்தான்.

அப்போது அவ்வாலிபன் “என் பெயர் பாலன். ஏதாவது வேலை 'கிடைக்குமா என்று நினைத்து நான் வீட்டை விட்டுக் கிளம்பி வந்தேன். உன்னைப் பற்றி விவரம் கூறுகிறாயா?'' என்று கேட்டான். தங்கப்பனும் 'நானும் உன்னைப் போலத்தான்" என்று கூறித் தன்னைப் பற்றி விவரமாகக் கூறி னான். அப்போது பாலன் “சரிதான். நாம் இருவரும் ஒரே மாதிரி தான்" என்றான் சிரித்தவாறே.

பாலன் தான் கொண்டு வந்த ரொட்டியைத் தங்கப்பனோடு பகிர்ந்து உண்டான் இருவரும் அங்கே ஓரிடத்தில் படுத்தார்கள். அப்போது தங்கப்பன் இந்தக் காலத்தில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. யாருக்காவது லஞ்சம் கொடுத்தாலே வேலை கிடைக்கிறது" என்றான். 


பாலனும் “நீ சொல்வது உண்மையே எனக்கு மட்டும் யாராவது வேலை கொடுத்தால் என் திறமையை வெளிப்படுத்தி உண்மையாய் உழைத்து என் நேர்மையைக் காட்டுவேன்” என்றான். அப்போது ஒரு குரல் “அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்” என்றது. மறுநிமிடம் அவர்கள் இருவரின் இருவரின் முன் அம்மன் 'காட்சி அளித்தாள். பாலனும் தங்கப்பனும் அவளை வணங்கி “தாயே! வேலை இல்லாது திண்டாடும் எங்களுக்கு நீ உதவுவது உனக்கு எங்கள் மீது ஏற்பட்டுள்ள இரக்க இயல்பையே காட்டுகிறது" எனக்கூறித் துதித்தார்கள். 

அம்மனும் “உங்கள் இருவருக் கும் ஆளுக்கு ஒரு மண் கலயமும், ஒரு குளிகையும், ஒரு பித்தளை மோதிரமும் கொடுக்கிறேன். நீங் கள் யார்முன்னும் அந்த மண்கலயத் தைப் போட்டு உடைத்து, குளிகையை வாயில் போட்டுக் கொண்டால் அந்த மனிதன் நீங்கள் சொல்கிறபடியே நடப்பான். இந்தப் பித்தளை மோதிரம் உங்கள் விரலில் இருக்கும்வரை நீங்கள் பெற்ற பொருள்கள் உங்களிடமே நிலைத்து இருக்கும்” என்று கூறி அப்பொருள்களை அவர்களுக்குக் கொடுத்தாள். 

அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டதும் அம்மன் “ இப்பொருள்களுக்கு நான் கூறிய சக்தி மூன்று நாட்களுக்கே இருக்கும். அதனால் மூன்றாவது நாள் நீங்கள் இங்கு வந்து இதனால் அடைந்த பலனை என்னிடம் கூற வேண்டும்" என்று சொல்லிவிட்டு மறைந்தாள். 

மறுநாள் காலை மழை நின்றது அப்போது பாலன் “நான் அம்மன் கொடுத்த பொருள்களுடன் கிழக்கு திசையில் செல்கிறேன் நீயும் என்னோடு வருகிறாயா?" என்று கேட்டான் தங்கப்பனோ “இல்லை. நான் மேற்குப் பக்கமாகப் போகிறேன். இருவரும் மூன்று நாட்களானதும் மறுபடியும் இங்கே சந்திக்கலாம்” என்றான்.

இருவரும் தாம் தேர்ந்தெடுத்த திசையில் சென்றனர். தங்கப்பன் அக்காட்டிலிருந்து போய் இருட் டும் போது ஒரு நகரத்தை அடைந் தான். அம்மன் கொடுத்த அந்த மூன்று பொருள்களையும் எப்படி  உபயோகிப்பது என்பது பற்றி அவன் யோசித்து ஒரு முடிவிற்கு வந்திருந்தான் அதனால் அவன் ஒரு பெரிய மாளிகைக்குப் போய் கதவைத் தட்டினான். அந்த வீட்டு கதவைத் திறந்து எஜமானி கொண்டு வரவே அவன் மண்கலயத்தை அவள் முன் போட்டு உடைத்து “உன்னிடம் உள்ள தங்கத்தை என்னிடம் கொடுத்துவிடு' என்றான்.

மறுநிமிடம் அந்தப் பெண்மணி ‘தங்கம்! தங்கம்” என்று குரல் கொடுத்தாள். மறுநிமிடம் ஒரு பயங்கர வேட்டை நாய் ஓடி வந்து தங்கப்பனின் காலைக்கடித்து இறுகப் பிடித்துக் கொண்டது. அவன் எவ்வளவு முயன்றும் அதனின்றும் விடுபட முடியவில்லை. அப்போது அவனுக்குத்தான் அணிந்திருந்த பித்தளை மோதிரத்தின் சக்தி பற்றி அம்மன் கூறியது நினை விற்கு வந்தது அவன் உடனே தான் அணிந்திருந்த பித்தளை மோதிரத்தைக் கழற்றி தூர எறிந்தான். அப்போது நாய் அவனை விட்டு விட்டுப் போய்விட்டது. தங்கப்பன் இவ்வாறு தான் பெற்ற சக்தியை வீணாக்கிவிட்டு அம்மன் கோவி லுக்குத் திரும்பிச் சென்றான். 

அவன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்ததைப் பார்த்த அம்மன் “என்ன விஷயம்? ஏன் இப்படி கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்டாள். தங்கப்பனும் நடந்ததைச் சொன்னான். அப்போது விலையுயர்ந்த பட்டாடைகளை அணிந்து மிகுந்த உற்சாகத்துடன் பாலன் வந்தான். அம்மன் அவனிடம் அவனது அனுபவம் `என்ன என்று கேட்கவே அவனும் கூறலானான். 

நான் அந்த அபூர்வப் பொருள்களை எப்படிப் பயன் பெறத்தக்க முறையில் உபயோகிப்பது என்று யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவனாய்த் தலைநகருக்குச் சென்றேன். அப்போது மாலை வேளை மன்னர் அரண்மனைப் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தார். அவர் முன் கலயத்தைப் போட்டு உடைத்து குளிகையை வாயில் போட்டுக் கொண்டேன். மன்னரிடம் அவரது தர்பாரில் ஒரு உயர்ந்த உத்தியோகத்தைக் கொடுக்குமாறு கேட்டேன். அவரும் “ ஆகா! தாராளமாகக் கொடுக்கிறேன். நாளையே வேலையில் சேர்” என்றார்.

நானும் உத்தியோகத்தில் சேர்ந்து சம்பளத்தில் முன் பணமாகக் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன். நான் வசிக்க ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தும் எடுத்த நல்ல துணிமணிகளையும் வாங் கிக் கொண்டேன். அந்த ஆடைகளை அணிந்துதான் உன்னைக் காணக் குறித்த காலத்தில் வந்துள்ளேன். இவ்வாறு அவன் கூறித் தன் கை விரலில் அணிந்திருந்த பித்தளை மோதிரத்தைக் கழற்றி அம்மனிடம் கொடுத்து "தாயே! எனக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து விட்டது. இனி என் திறமையைக் காட்டி அதில் நிலைத்து இருந்து படிப்படியாக உயர்வும் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பணிவுடன் கூறி னான். 

அப்போது அம்மன் “தங்கப்ப னுக்கும் உனக்கும் ஒரே மாதிரி யான பொருள்களைத்தான் கொடுத் தேன். ஆனால் அவன் அற்ப ஆசை யில் அவற்றின் சக்திகளைப் போக்கடித்து வெறுங்கையுடன் திரும்பி வந்திருக்கிறான். பாலனோ தன் திறமையைக் காட்டத் தனக்கு வேண்டிய ஒரு உத்தியோகத்தையே கேட்டான். அவன் மட்டும் நினைத்திருந்தால் மன்னரிடம் நாட்டையே கேட்டிருக்கலாம். மன்னரும் அதனைக் கொடுத்திருப்பார். ஆனால் பேராசைப்படாமல் அவன் தன் சொந்தக் காலில் நிற்கவே விரும்பினான். அவன் வெற்றி பெற்றான்” என்று கூறி மறைந்தாள். அப்போது தங்கப்பன் தன் மனதில் “ஆமாம். நான் முன்பின் யோசிக்காமல் அம்மன் கொடுத்த பொருள்களைச் சரியான முறை யில் உபயோகிக்காமல் அவற்றை விட்டேன். ஏதாவது வீணாக்கி நானும் பாலனைப் போல யோசித்துச் செயல்பட்டிருந்தால் ஒரு உத்தியோகத்தைப் பெற்றிருக்கலாமே. எனக்குக் கிடைத்த அரிய தோர் வாய்ப்பை இழந்து விட்டேனே” என்று எண்ணி மிகவும் மனம் வருந்தினான். 

மறுநாள் காலை பாலன் தலைநகருக்குக் கிளம்பியபோது "தங்கப்பா! நீயும் என்னோடு வா. உனக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும் வரை என் வீட்டிலேயே இருக்கலாம்” என்றான். தங்கப்பனும் “ஓ! வருகிறேன். உன்னிட மிருந்து நிறைய விஷயங்களைக் கற்க வேண்டியிருக்கிறது" எனக் கூறி அவனோடு சென்றான்.



Post a Comment

Previous Post Next Post