நாட்டிலேயே மிகச் சிறந்த அறிஞர்கள் கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்தனர். இதனால் அவருக்கு கர்வம் நிறையவே உண்டு. ஒரு நாள் அரசவைக்கு ஒரு சிற்பி மூன்று சிலைகளுடன் வந்தார்.
அவர் கிருஷ்ணதேவராயரைப் பார்த்து, "நீங்கள் உங்கள் சிறந்த அரசவையில்தான் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப்படுகிறீர்கள். இதோ நான் மூன்று சிலைகள் கொண்டு வந்துள்ளேன். இதில் சிறந்த சிலை எது என்று காரணத்துடன் சொல்ல வேண்டும். சொன்னால் அந்த அறிஞருக்கும் உங்களுக்கும் நான் அடிமை. அப்படி யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை அந்த அறிஞர் எனக்கு அடிமை. அத்துடன் இனிமேல் அறிஞர் நிறைந்த சபை என்ற கர்வத்தை நீங்கள் விட்டு விட வேண்டும்," என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர். சிலர் கோபத்துடன் அந்த சிற்பி மீது பாய்ந்தனர்.
ஆனால் கிருஷ்ணதேவராயரோ அவர்களைத் தடுத்தார். 'கேவலம் மூன்று சிலை கொண்டு வந்துள்ளார் இந்தச் சிற்பி.இதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முடியாதா, என்ன? இந்தக் கேள்வியை ஏற்றுக் கொண்டு நல்ல விடையைத் தருவோம்" என்றார் மன்னர்.
யார் வேண்டுமானாலும் சிலை அருகே வரலாம் என்றார் சிற்பி. அறிஞர்கள் ஒவ்வொருவராக சிலை அருகே வந்து அதை நன்கு உற்றுப் பார்த்தனர். தூக்கிப் பார்த்தனர். ஒரே எடை, ஒரே அமைப்பு. ஒரே வர்ண அமைப்பு. எந்த வித வித்தியாசமும் எள்ளளவும் இல்லை. அனைவரும் திகைத்தனர்.
அறிஞர்கள் பலருக்கும் தெனாலிராமன் மீது பொறாமை உண்டு. இந்த சந்தர்ப்பத்தில் தெனாலிராமனை மட்டம் தட்டலாம் என்று எண்ணிய அவர்கள், அரசே! தெனாலிராமன் தான் சிறந்த அறிஞன் என்று அடிக்கடி சொல்வீர்களே, தெனாலிராமனே இதற்கு பதில் கூறட்டும்" என்றனர்.
அவர்களின் உள்நோக்கத்தை மன்னர் புரிந்து கொண்டார். தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் அவர் பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்து, "இதோ நான் பார்க்கிறேன் அரசே " என்று சொல்லி விட்டு சிலைகளின் அருகே வந்தான். எல்லோரும் தெனாலிராமன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று நினைத்தனர்.தெனாலிராமன் மூன்று சிலைகளையும் சற்று நேரம் ஆராய்ந்தான். எந்த வித வித்தியாசமும் தெரியாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு கண்ணை விழித்துக் கொண்டு, “அரசே! எனக்கு இரண்டு அடி நீளமுள்ள பொடிக் கம்பி வேண்டும்' என்றான்.
சிலைக்கும் கம்பிக்கும் என்ன சம்பந்தம்? அனைவரும் சிரித்தனர்.கம்பி வந்தது. அந்தக் கம்பியை முதல் சிலையின் காது வழியே செலுத்தினான் தெனாலிராமன்.என்ன ஆச்சரியம்.நேராகச் சென்று அடுத்த காதின் வழியே வந்தது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தெனாலிராமனின் மலர்ந்தது. "இன்னொரு கம்பி வேண்டும் மன்னா!" என்றான் தெனாலிராமன்.
நல்ல கதை. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
ReplyDeleteநன்றி
Deleteநல்ல கதை
ReplyDeleteநன்றி
DeletePost a Comment