பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஆட்சியின் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங், 1829 மார்கழியில் சதி நடைமுறையைத் தடை செய்தார். இருப்பினும், பின்னர் அந்தச் சட்டம் தளர்த்தப்பட்டது.1829 மார்கழியில் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான லார்ட் வில்லியம் பெண்டிங், சதி நடைமுறைக்கு தடை விதித்தார். சதி என்பது ஒரு பண்டைய இந்து பழக்கம் ஆகும். இதன்படி, கணவன் இறந்ததும், அவருடைய மனைவி கணவனின் சடலத்தை எரிக்கும் சிதையில் உயிரோடு விழுந்து இறந்து விடுவார். அந்தக் காலத்தில் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த பெண்டிங், 49 மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐந்து நீதிபதிகளுடன் கலந்தாலோசித்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான கறையைப் போக்க இதுவே சரியான தருணம் என அவர் கருதினார்.
அவரது கருத்துப்படி, சதி நடைமுறையானது மனித இயல்புக்கு முரணான மற்றும் அருவருக்கத்தக்க ஒன்றாக இருந்ததுடன், பல இந்துகளையும் அதிர்ச்சி க்குள்ளாக்கியிருந்தது.
இது ஒரு சட்டவிரோதமான மற்றும் கொடூரமான நடைமுறையாகக் கருதப்பட்டது.இந்துப் பெண் கணவனை இழந்த நிலையில், கணவரின் சிதையிலேயே அந்தப் பெண்ணையும் உயிரோடு எரிக்கும் கொடூரத்திற்கு (அது அப்பெண்ணின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் கூட) துணை யாக நிற்போரும் தூண்டுதலாக இருப் போரும் கொலைக் குற்றவாளிகளா கவே கருதப்படுவர் என சதி ஒழிப்புச் சட்டம் திட்டவட்டமாகக் கூறியது.
அத்துடன், மயக்க நிலையிலோ அல்லது தன் சுயபுத்தியுடன் முடிவெடுக்க முடியாத நிலையிலோ உள்ள ஒரு கைம்பெண்ணை, சிதையில் ஏற்றி எரிப்பதற்குத் துணை நிற்கும் அல்லது உடந்தையாக இருக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டரீதியான அதிகா ரத்தையும் இச் சட்டப்பிரிவு நீதிமன்றங்களுக்கு வழங்கியது.
சதி எனப்படும் உடன்கட்டை நடை முறையை வேரோடு ஒழிப்பதற்காக, அதற்கு எதிராகப் போராடி வந்த முன்னணி இந்திய சீர்திருத்தவாதிகள் பரிந்துரைத்த மெதுவான சீர்திருத்த நடவடிக்கைகளை விட,பெண்டிங்கின் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ராஜா ராம் மோகன் ராய் தலைமையில் 300 முக்கிய இந்துக்கள், பெண்களை திட்டமிட்டுக் கொலை செய்பவர்கள் என்ற கறையிலிருந்து தங்களை எப்போதும் காப்பாற்றியதற்காக பெண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தனர்.
ஆனால், பழமைவாத இந்துக்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்டிங்கிடம் மனு அளித்தனர். அறிஞர்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோள் காட்டி, சதி முறை என்பது மதத்தின் கீழ் ஒரு கட்டாயக் கடமை அல்ல என்ற பெண்டிங்கின் வாதத்தை அவர்கள் எதிர்த்தனர். இருந்தபோதிலும், பெண்டிங் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.
பழமைவாதக் கருத்துகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை
இந்தியாவில் சாதி குறித்த சட்ட வரலாற்றை ஆராயும் காஸ்ட் பிரைடு என்ற புத்தகத்தை எழுதிய மனோஜ் மித்தா, 1829-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்தச் சட்டத்தின் துணிச்சலான மற்றும் உறுதியான போக்கு, 190 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி யில்,பழமை வாத உணர்வுக ளுக்குச் சிறிதும் இடமளிக்காமல் சமூகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டதற்கு அநேகமாக ஒரேயொரு உதாரண மாக இருக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார். மித்தா மேலும் எழுதுகையில்,
இந்திய மக்களை உள்ளிருந்து சீரழித்துக் கொண்டிருந்த இந்த ஒரு உள்நாட்டு வழக்கத்தைக் குற்றமாக அறிவித்ததன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் |ஒரு தார்மீக வெற்றியை அடைந்தனர் என்று கூறுகிறார்.ஆனால் 1837-இல், இந்தியத் தண்டனைச் சட்டத்தை வரைவு செய்த மற்றொரு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மெக்காலே,பெண்டிங்கின் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விட்டார்.
மெக்காலேயின் விளக்கத்தின்படி, ஒரு நபர் சம்பந்தப்பட்ட கைம்பெண் ணின் தூண்டுதலின் பேரில் தான் சிதையை மூட்டினேன் என்று ஆதாரத்துடன் வாதிட்டால், அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கி விடுவிக்க முடியும். தீவிரமான மதக் கடமை உணர்வு மற்றும் சில சமயங்களில் மிகுந்த கௌரவ உணர்வு காரணமாகப் பெண்கள் தங்களைத் தாங்களே உயிருடன் எரித்துக் கொள்ளக் கூடும் என்று அவர் ஒரு வரைவுக் குறிப்பில் எழுதியிருந்தார்.
சதி பழக்கத்தின் மீதான மெக்காலேயின் இந்த மனிதாபிமான அணுகுமுறை பல தசாப்தங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்தது என்பதை மித்தா கண்டறிந்தார். ‘சதி' எனும் குற்றம், கொலையிலி ருந்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்றானது 1862ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம், சதி ஒழிப்புச் சட்டத்தின் இரு முக்கியத் தண்டனை விதிகளை அடியோடு இரத்து செய்தது.
உடன்கட்டை ஏறுதலைக் குற்றவியல் கொலைக்கு இணையானதாகக் கருதி தண்டிக்கும் முதல் விதியும், கொடூரமான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் மாற்று விதியும் நீக்கப்பட்டன. இந்தச் சட்டத் தளர்வானது, பாதிக் கப்பட்ட பெண் தன் கணவரின் இறுதிச்சடங்கின் போது சுயவிருப்பத்துடன் தான் உயிரைத் துறந்தார் என்றும், எனவே இது கொலை அல்ல, தற்கொ லைதான் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாதிட வழிவகுத்தது.சதி ஒழிப்புச் சட்டத் தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தளர்வானது, அன்றைய சமூகச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நிலவி வந்த ஆழ்ந்த அதிருப்தியின் எதிரொலியே என்று மித்தா குறிப்பிடுகிறார். சதி முறையைச் சட்டவிரோதமாக்கிய சட்டம் சாதி நீக்கம்- செய்யப்பட்ட மற்றும் மதம் மாறிய இந்துக்களுக்குக் குடும்பச் சொத்தில் வாரிசுரிமை வழங்கிய 1830-ஆம் ஆண்டுச்சட்டம், மற்றும் கைம்பெண்கள் மறுமணத்தை அனு மதித்த 1856-ஆம் ஆண்டுச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் புகைந்து கொண்டிருந்த சமூக ஆத்திரத்தின் விளைவாகவே பிரிட்டிஷ்டர் இந்தத் தவர்வை மேற்கொண்டதாக அவர் எழுதுகிறார்.
1829 மற்றும் 1862 க்கு இடையில், உடன்கட்டை ஏறுதல் என்னும் குற்றம் கொலை என்ற நிலையிலி ருந்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்பதாக மாற்றப்பட்டது. 1829 முதல் உடன்கட்டை ஏறும் வழக்கம் குறைந்துவிட்ட போதிலும், இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதி களில், குறிப்பாக உயர்சாதியினரிடையே, சதி முறையானது பெருமை மற்றும் மரியாதைக்குரிய ஒன்றாகவே பார்க் கப்பட்டு வந்தது.மோதிலால் நேரு, 1913ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் உடன்கட்டை ஏறியது தொடர்பான வழக்கு ஒன்றில் உயர்சாதியைச் சேர்ந்த ஆறு ஆண்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார்.கைம்பெண்ணின் அசைக்க முடியாத பக்தி உணர்வால், சிதை தானாகவே அற்புதம் போல் பற்றிக்கொண்டது என்பதே நீதிமன்றத்தில் அந்த ஆண்களின் வாதமாக இருந்தது. ஆனால், இந்த தெய்வீகத்தலையீடு என்ற கட்டுக் கதையை அடியோடு நிராகரித்த நீதிபதிகள், உண்மையை மூடிமறைக்க முயன்ற குற்றத்திற்காக அவர்களைக் கடுமையாகச் சாடினர். தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக அவர்கள் அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. 1987 ஆம் ஆண்டில், நேருவின் கொள்ளுப் பேரனான ராஜீவ் காந்தியின் தலைமையிலான மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. சதி நடைமுறையை பெருமைப்படுத்துவதை முதன்முறையாகக் குற்றமாக அறிவித்து, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இயற்றப்பட்டது. இப்புதிய சட்டத்தின்படி, உடன் கட்டை ஏறுதலை மீண்டும் கொலை என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்த இச்சட்டம், அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் கடுமையான விதியையும் மறுஅறி முகம் செய்தது.


Post a Comment